tamilnadu

img

திருச்சி அரசு மருத்துவமனை ஊழியருக்கு மீண்டும் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 29-திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பல்வேறு பணிகளில் ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சட்டக்கூலியாக மாதந்தோறும் ரூ.11,300 வழங்க வேண்டும். ஆனால் மாத சம்பளமாக ரூ.5500 மட்டுமே வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சட்டக்கூலியான ரூ.11,300 வழங்கக் கோரி போராடிய 3 தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் வேலையை விட்டு நிறுத்தி விட்டனர்.இதனை கண்டித்தும் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும்வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து ஆர்டிஓதலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 3 பேருக்கும் மீண்டும்வேலை வழங்குவது என தீர்மானிக்கப் பட்டது. ஆனால் 2 பேருக்கு மட்டும் வேலை வழங்கி போராட்டத்திற்கு தலைமை வகித்தவருக்கு தற்போது வரை வேலை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.இதனை கண்டித்தும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு உடனேவேலை வழங்க வேண்டும். சட்டக்கூலிரூ.11,300 வழங்க வேண்டும். மாதந் தோறும் 1-ம் தேதி சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சிமகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் சங்கம்சார்பில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.சங்க மாவட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ரெங்கராஜன், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன், மருந்து மற்றும் விற்பனைபிரதிநிதிகள் சங்க ராமச்சந்திரன், ஆட்டோ சங்க நிர்வாகி பல்டோனா, அரசு ஊழியர் சங்க சகாதேவன் ஆகியோர் பேசினர். திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவைபெற்றுக் கொண்ட ஆட்சியர் சட்டக் கூலி குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

;