tamilnadu

திருச்சி, திருவாரூர்  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருச்சிராப்பள்ளி, டிச.23- திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருச்சி மேற்கு தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநக ராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் பொதுமக்கள் பார்வைக்கு திங்களன்று வெளியிட்டார். திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,25,737, பெண் வாக்காளர்கள் 1,34,318, மற்றும் இதரர் 15 பேர் உள்ளனர். திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,20,204 பெண் வாக்கா ளர்கள் 1,26,614 மற்றும் இதரர் 37 பேர் உள்ளனர்.  வாக்காளர்கள் தங்களது வாக்காளர் பதிவு தொடர்பாக மாநகராட்சி மைய அலுவலகம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகங்களில் வாக்காளர் வரைவு பட்டியலினை சரி பார்த்து கொள்ளவும். வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடும் போது உதவி ஆணையர்கள் நா.சண்முகம், எஸ்.திருஞானம், வினோத் மற்றும் மாநக ராட்சி தேர்தல் தனித்துணை வட்டாட்சியர் வி.ஆர்.சுமதி உடனிருந்தனர். திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் வெளியிட்டார். மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல்கள் திருவாரூர் மற்றும் மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலகங்களிலும், அனைத்து வட்ட அலுவல கங்களிலும், அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதேபோல அனைத்து வாக்குச்சாவடி மையங்க ளிலும் தொடர்புடைய பாகங்களின் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.