திருச்சிராப்பள்ளி, ஜூலை 11- சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் அசோக்கிற்கு சங்க மணப்பாறை வட்டக்குழு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மணப்பாறையில் வியாழனன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புறநகர் மாவட்ட தலைவர் பாலு தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் இளையராஜா, சங்கர்ராஜ், வட்டதுணை செயலாளர் மாசிலாமணி, முருகேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் கருப்பையா, சரவணன், தங்கராஜ் ஆகியோர் தோழர் அசோக் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.