tamilnadu

சுற்றுலா வளர்ச்சி குழுமக் கூட்டம்

தஞ்சாவூர், ஜூலை 4- தஞ்சாவூரில் சுற்றுலா வளர்ச்சி குழுமக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. கூட்டத்தில், இராஜராஜன் மணிமண்டபத்தின் அழ கினை கூட்டும் வகையில், பூச்செடிகளை நட்டு வளர்த்தல், சுற்றுலா வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றும் பணி யாளர்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கு தல், இராஜராஜன் மணிமண்டபத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உணவகம் அமைத்தல், தொல்காப்பியர் சதுக்கத்தில் உள்ள கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், ராசாமிராசுதார் மருத்துவமனை உள்ளே இரு சக்கர வாகனங்கள் நிறுத்துதல், மணிமண்டபத்தில் உள்ள ஆழ்துளை போர்வெல் மற்றும் குடிநீர் குழாய் களை சரிசெய்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக் கப்பட்டது.