tamilnadu

வேலூர் , விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

மனைப் பட்டாக்களை பதிவு செய்ய வலியுறுத்தல்

வேலூர், ஜூன் 30- இந்திரா நகரில் கடந்த 2007ஆம் ஆண்டு 200 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால் இதுவரை அந்த பட்டாக்களை கிராமக் கணக்கில் பதிவு செய்து தர வில்லை. இதனால் அந்த பட்டாவைக் கொண்டு வீடு கட்ட வங்கிகளில் கடன் பெறவோ மற்ற சலுகை களை பெறவோ முடிய வில்லை.  குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் இந்திரா நகர் பகுதி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா ளர் கே.சாமிநாதன் தலைமை யில் அங்கு வந்த பட்டா தாரர்கள் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த கோரிக்கை

விழுப்புரம், ஜூன் 30-  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வானூர் வட்ட 2 ஆவது மாநாடு வட்டத் தலைவர் ஏ.வேணு கோபால் தலைமையில் நடைபெற்றது,  விநாயகபுரம் ஆர்.காளிதாஸ்,வி.புதுக்பாக்கம் ஜெ.ரவிச்சந்திரன்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி துவக்கிவைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் வி.ராதா கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மத்திய மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் மாத உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாகவும், ஊனமுற்றோர்களுக்கு ரூ.5 ஆயிரம் என உயர்த்தி வழங்க வேண்டும், நூறு நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணை 52 ன்படி 4 மணிநேரம் வேலை, ரூ.229 முழு கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்ட சிறப்புத் தலைவராக எம்.கே.முருகன்,  தலைவராக ஆர்.காளிதாஸ்,  செயலாளராக ஏ.வேணுகோபால்,  பொரு ளாளராக எஸ்.பெருமாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர்.

பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலையில்  உள்ள டேனிஷ் மிஷின் பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் க.சு கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது கடந்தாண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், தங்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் மாணவர்களை விரட்டினர். இதை படமெடுத்த செய்தியாளர்களை காவல்துறையினர் தடுத்தனர். இதனால் செய்தியாளர்கள் பள்ளி நுழைவு வாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மடிக்கணினி கேட்டு ஆர்ப்பாட்டம்

வேலூர், ஜூன் 30  வேலூர், வெங்க டேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில், அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. மாவட்ட  ஆட்சியர் ராமன் தலைமை வகித்தார். தமிழக அமைச்சர் வீரமணி, 2,117 மாணவ, மாணவியருக்கு, மடிக்கணினி வழங்கினார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ரவி, லோகநாதன், கார்த்தி கேயன், ஆவின் தலைவர் வேலகழகன் பங்கேற்றனர்.  விழா நடந்து கொண்டி ருக்கும் போது, 2017-18ம் கல்வியாண்டில், அதே  பள்ளியில், 12 ஆம் வகுப்பு முடித்த, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்க ளுக்கும் லேப்டாப் வழங்கக்கேட்டு, அமைச்சரை முற்றுகையிட வந்தனர். அவர்களை, பள்ளி நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர்   திருப்பி அனுப்பினர்.  இதேபோல், வாணியம்பாடி காந்தி நகர் அரசு மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற விழாவிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.

;