tamilnadu

img

நூறு நாள் வேலை தருவதாக பொய் கூறி பெண்களை அழைத்து வந்த ஆளுங்கட்சியினர்

எதிர்த்து கேள்வி கேட்டதால் வேலை தர மறுப்பு


கும்பகோணம், ஏப்.4- மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஆசைமணி என்பவர் போட்டியிடுகிறார். அவர் கூட்டணி கட்சிகளோடு, அதிமுகபிரமுகர்கள் புடைசூழ தஞ்சை மாவட்டம்கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தண்டாளம் ஊராட்சியில் கோழியகுடி கிராமத்திற்கு புதனன்று வாக்கு சேகரிக்க வந்தார். முன்னதாகவே அங்குள்ள அதிமுகபிரமுகர்கள் பொய்யாக கோழியக்குடி கிராம மக்களிடம் இன்று அனைவருக் கும் 100 நாள் வேலை இருக்கிறது. அனைவரும் ஊராட்சி மன்றத்திற்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து 100 நாள் வேலை செய்யும் அனைவரும் ஊராட்சி மன்றத்தில்கூடியிருந்தனர். அப்போது அங்குவாக்கு சேகரிக்க வந்த ஆசைமணியைமுற்றுகையிட்டு, எங்களுக்கு எங்கள்கிராமத்தில் ஒருவருக்கு கூட 100 நாள்வேலை முழுவதும் வழங்கப்படவில்லை. உங்கள் அதிமுக அரசு 2000 பணம் போடுவேன் என்று சொன்னது. ஆனால் இதுவரை கிடைக்கவில்லை என சரமாரியாக கேள்வி கேட்டு பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது திருவிடைமருதூர் அதிமுக முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஏ.வி.கே.அசோக்குமார் என்பவர், நூறு நாள் திட்டப் பெண்களைப் பார்த்து,நாங்கள் தான் ஆட்சியில் இருக்கிறோம். அடுத்த முறையும் நாங்கள் தான் ஆட் சிக்கு வருவோம். உங்களால் என்ன செய்ய முடியும் என்றார் மிரட்டும் தொனியில். அத்துடன், ஊராட்சி பணியாளர்களிடம் எங்களை எதிர்த்து கேள்வி கேட்டவர்களுக்கு வேலை வழங்கக் கூடாது எனக் கூறினார். 


இப்போதே இப்படி இருக்காங்க, ஜெயிச்சா? 


இந்நிலையில் வியாழன் அன்று 100 நாள் வேலைக்கு செல்லும் போதுஅதிமுக வேட்பாளரையும் முன்னாள் ஒன்றிய சேர்மனையும் கேள்வி கேட்ட கோழியகுடி கிராமத்தை சேர்ந்த பெண் கள் சிலருக்கு சேர்மனை எதிர்த்து கேள்வி கேட்டதால் வேலை இல்லை என தெரிவித்துள்ளனர். உங்களுக்கு வேலை வேண்டுமானால் முன்னாள் சேர்மன் அசோக்குமாரிடம் மன்னிப்பு கேட்டால் தான் உங்களுக்கு வேலை வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனால் சுமார் 100 பெண்கள் யாரும் வேலைக்கு செல்லாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, நாங்கள் எங்கள் உரிமையை கேட்டோம். அதற்காக கேள்வி கேட்டவர்கள்5 பேருக்கு வேலை இல்லை என்பதுகண்டிக்கத்தக்கது. அவர்கள் வேலைக்கு சேரும் வரை நாங்கள் யாரும் வேலைக்கு செல்ல மாட்டோம். இவர்கள் இப்போது இப்படி இருந்தால் ஜெயிச்சி வந்துட்டா எப்படி இருப்பாங்க என குமுறலோடு தெரிவித்தனர்.ஆகவே 100 நாள் வேலையை பயன் படுத்தி வாக்கு சேகரிப்பதற்காக பொய் யான தகவலைச் சொல்லி ஆட்களை திரட்டி, கேள்வி கேட்பவர்களை மிரட் டும் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாக உள்ளது.

;