திருச்சிராப்பள்ளி: காரல் மார்க்ஸ் 200-வது ஆண்டு விழா, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 100-வது ஆண்டு விழா மற்றும் நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா ஆகிய முப்பெரும் விழா அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட சங்க அலுவலகத்தில் செவ்வாய் அன்று நடைபெற்றது. விழாவிற்கு சங்கத் தலைவர் சம்பத் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஏற்றி வைத்து சிறப்புரை யாற்றினார். அகில இந்திய மாநாட்டு விளக்கவுரை குறித்து துணைத் தலைவர் சீனிவாசன் பேசினார். அரசு விரைவு போக்குவரத்து கழக சம்மேளன உறுப்பினர்கள் ஜெயராமன், முத்துவேல், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க நடராஜன், சிங்கராயர், முருகன், சந்தானம், சிவக்குமார் மற்றும் கிளை சங்க நிர்வாகி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சம்மேளன பொதுச்செயலாளர் கருணாநிதி வரவேற்றார். பொருளாளர் சுப்ரமணி நன்றி கூறினார்.