திருச்சி அருகே மணல் கடத்தல்: 6 பேர் கைது
முசிறி, ஜூன் 20- தா.பேட்டை பகுதியில் நூதன முறையில் மணல் கடத்த லில் ஈடுபட்டவர்களை காவலர்கள் கைது செய்தனர். 2 மணல் லாரி மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை, தொட்டியம் பகுதி களில் மணல் கடத்தலை தடுக்கும் நோக்கில் காவல்துறை, வருவாய் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு முசிறி டிஎஸ்பி தமிழ்மாறன் தலைமையில் தா.பேட்டை காவல் ஆய்வா ளர்(பொ) குருநாதன் மேற்பார்வையில் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது மாவட்ட எல்லையான பவுத்திரம் அருகே நீலியாம்பட்டி வழியாக வேன் ஒன்று வந்தது. அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் காவிரி ஆற்று மணல் நிரம்பி இருந்தது தெரிந்தது. மேலும் வாளசிராமணி கிரா மத்தில் 2 லாரிகளை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். தார்பாய் போட்டு கட்டப்பட்டிருந்த நிலையில் லாரிகளை சோதனையிட்ட போது 2 லாரிகளிலும் காவிரி ஆற்று மணல் நிரப்பப்பட்டிருந்தது. காவிரி ஆற்று மணல் அனுமதியின்றி திருடி வரப்பட்டது தெரிந்தது. இதையடுத்து வேனை ஓட்டி வந்த ஜம்புமடை கிரா மத்தை சேர்ந்த டிரைவர் பாலசுப்ரமணியன்(28), வண்டியின் உரிமையாளர் நாமக்கல் தனுஷ்பிரபு(32), லாரி உரிமை யாளர் தொட்டியம் மாதேஸ்வரன்(32), லாரி டிரைவர்கள் சிவக்குமார்(28), பிரபாகரன்(27) உள்பட 5 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்பட்ட வேன் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
சீர்காழி
இதே போல் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிர வேளுர் பாண்டியன் தெருவைச் சேர்ந்த சாமுவேல்(22) என்ப வர், அவருக்குச் சொந்தமான டிராக்டர் மூலம் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தகவலறிந்து வந்த கொள்ளிடம் காவல் ஆய்வாளர் ராஜேந்தி ரன் தலைமையில் காவல்துறையினர் மணல் கடத்திய சாமு வேலை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
கட்டளை மேட்டுக் கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
தஞ்சாவூர், ஜூன் 20- உய்யக்கொண்டான் வாய்க்கால் கட்டளை மேட்டு கால் வாயை முழுமையாக தூர்வார வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் விவ சாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அதில், “கடந்த ஆண்டு பூதலூர் தாலுகாவில் உய்யக்கொண்டான் வாய்க்கால், கட்டளை மேட்டு கால்வாயில் உள்ள ஏரியில் தூர்வாரும் பணி தொடங்கியது. இடையில் தண்ணீர் வந்த தால் பணிகள் நிறுத்தப்பட்டன. பெரும்பகுதியிலான வேலை கள் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது. தடுப்புச்சுவர் அமைப்பது, கரைகளை பலப்படுத்துவது மற்றும் பிற பணி களும் நடைபெற வேண்டியுள்ளது. தண்ணீர் செல்லும் குமிழிகள் பழுதடைந்து, நீர்ப் போக்கு வரத்து செல்வது சிரமமானதாக உள்ளது. எனவே அனைத்து பணிகளையும் உடனடியாக செய்ய வேண்டும். மேலும், பூத லூர் ஆனந்த காவேரி கடந்த பல ஆண்டுகளாக தூர்வா ரப்படாமலேயே உள்ளது. கடந்த ஆண்டு விவசாயிகளின் சொந்த முயற்சியில் சிறிதளவு பணிகள் நடைபெற்றது. சாலை போடும் பணி மேற்கொண்டவர்களும், வாய்க்காலில் அடைப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டதால், முட்புதர்கள் உள்ளிட்ட மணல்மேடுகள் நிரம்பியுள்ளது. எனவே உடனடி யாக தூர்வார வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.