தஞ்சாவூர், ஜூலை 1- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்க பதவியேற்பு விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் பேராசி ரியர் ஹாஜி எம்.ஏ.முகமது அப்துல் காதர் தலைமை வகித்தார். செயலாளர் எம்.அப்துல் ரஹ்மான் ஆண்ட றிக்கை வாசித்தார். லயன்ஸ் சங்க மாவட்ட முன்னாள் ஆளு நர் எஸ்.முகமது ரபி வாழ்த்திப் பேசினார். சங்க தலைவராக ஹாஜி எம்.அப்துல் ஜலீல், செய லாளராக சேக்கனா எம்.நிஜாமுதீன், பொருளாளராக ஹாஜி எஸ்.எம்முகமது முகைதீன், நிர்வாக அலுவலராக ஹாஜி எம்.நெய்னா முகமது மற்றும் நிர்வாகிகள் பொறுப் பேற்றனர். சங்க புதிய உறுப்பினர்களுக்கு மாவட்ட துணை ஆளு நர் செளமா. ராஜரெத்தினம் பதவி பிரமாணம் செய்து வைத்து, சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில், ஆதரவற்ற பெண் ஒருவருக்கு வாழ்வாதார உதவி யாக தையல் இயந்திரம், ஆதரவற்ற 5 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம் 50 கிலோ அரிசி, கஜா புயலில் பாதிப்ப டைந்த விவசாயிகளுக்கு 50 தென்னைக் கன்றுகள் என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில், கஜா புயல் நிவாரணப் பணி, மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆற்றிய எம்.எஸ். குர்ஷீத் ஹுசைன், ஆர்.ரமேஷ் குமார், ஏ.ஸ்டாலின் பீட்டர் பாபு, ஏ.ஜெயபால், டாக்டர் ரொக்கையா சேக்முகமது, வ. விவேகானந்தம், ஆர்.மாரிமுத்து மற்றும் அதிரை பைத்துல் மால், அக்ரா சேவை அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகி யோருக்கு விருது வழங்கப்பட்டது. லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் கே.ரமேஷ்குமார், வட்டாரத் தலைவர், ஆர்.தமிழரசன், ஆர்.சரவணன், மாவட் டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், மாவட்டத் தலைவர் எஸ்.பி.கணபதி கலந்து கொண்டனர்.