சீர்காழி, ஜூலை 8- நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் வட்டார அளவிலான அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு மடிக்கணினி வீதம், 63 பள்ளிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. சீர்காழி எம்.எல்.ஏ பாரதி தலைமை வகித்து, தலைமையாசிரி யர்களிடம் மடிக்கணினிகளை வழங்கி பேசினார். ஒருங்கிணைந்த கல்வித் திட்ட மேற்பார்வையாளர் பூங்குழலி வரவேற்றார். சீர்காழி நகர நிலவள வங்கித் தலை வர் நற்குணன் ஒன்றிய ஆணையர் சரவணன், பி.டி.ஓ தமிழ்க்கொடி முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலு வலர்கள் பாபு, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்ட னர். தொடர்ந்து கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவச சீருடையை எம்.எல்ஏ பாரதி வழங்கினார்.