சென்னை, ஜூலை 2- சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட எம்.கே.பி நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் சென்ட்ரல் அவென்யூ குடிநீர் அலுவல கத்தில் செவ்வாயன்று (ஜூலை 2) மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். பெரம்பூர் பகுதி 37 ஆவது வட்டத்திற்குட்பட்ட கண்ணதாசன்நகர், ஆர்.ஆர்.நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தாமோதரன்நகர்,எம்கேபி நகர், எம்ஜிஆர் நகர், சத்திய மூர்த்தி, நெசவாளர் காலனி, ஜே.ஜே.ஆர்.நகர், கென்னடி நகர், சாமியார் தோட்டம், தேபர் நகர், அன்னை இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு கடுமை யாக உள்ளது. மேலும் விநி யோகிக்கப்படும் குடிநீரி லும் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் இதை பயன்படுத்தும் பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக் கோரியும், தொடர்ந்து குடிநீர் வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் சென்ட்ரல் அவென்யூ குடிநீர் அலுவலகத்தில் நடை பெற்றது. இந்தப் போராட்டத்திற்கு எம்.ராஜ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், எஸ்.ஏ.வெற்றிராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். இந்த போராட்டத்தின் போது கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட பகுதி செயற்பொறியாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.