குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி புதுக்கோட்டையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், திமுக நகரச் செயலாளர் நைனாமுகமது, இந்திய முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளர் அஷ்ரப்அலி, தமுமுக மாவட்டச் செயலாளர் அப்துல்கனி, திராவிடர் கழக மண்டலச் செயலாளர் ராவணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.