tamilnadu

img

தேசிய குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படாதென அறிவிக்காவிட்டால் கோட்டை முற்றுகை

தமிழக அரசுக்கு பாலபாரதி எச்சரிக்கை

கும்பகோணம், ஜன.18- தமிழகத்தில் தேசிய குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படாது என்ற உறுதியை தமிழக முதலமைச்சர் அளிக்காவிட்டால் அடுத்து சட்ட மன்றம் கூடும் போது கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கும்பகோணத்தில் தெரி வித்துள்ளார். கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே தி.மு.க., காங்கி ரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிகள் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து  கண்டன பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன், சி.ஜெயபால் அருளரசன் சிஐடியு மாவட்டப் பொருளாளர் எம். கண்ணன், மாவட்டக் குழு உறுப்பி னர் பக்கிரிசாமி, கும்பகோணம் ஒன்றி யச் செயலாளர் பி. ஜேசுதாஸ், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சா .ஜீவபாரதி, கும்ப கோணம் நகர செயலாளர் செந்தில் குமார், சிறுபான்மை நல குழு மாவட்ட செயலாளர் பி. எம். காதர் உசேன், தி.மு.க. சார்பில் கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், தமுமுக மாநில பொதுச்செயலாளர் ஹாஜா கனி விடுதலை சிறுத்தை கட்சி மண்டல பொறுப்பாளர் விவேகானந்தன் மற்றும் அனைத்து கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலி யுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ, பால பாரதி, இந்தியாவில் 13 மாநில அரசு கள் தேசிய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளதாகவும், கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் இந்த சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். வரும் ஏப்ரல் மாதம், தமிழ கத்தில் இதற்கான பதிவுப் பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய குடியுரிமை சட்டத்தை அமல் படுத்தப்படாது என்ற உறுதியை தமிழக அரசு அளிக்காவிட்டால் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரின் போது கோட்டையை முற்றுகையிட அனைத்து கட்சிகள் சார்பில் முடி வெடுக்கப்படும் என்றும் பாலபாரதி தெரிவித்தார்.

 

;