tamilnadu

img

அறிவியல் வளர்ச்சி இயக்க விழா

கும்பகோணம், ஆக.30- கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் அறிவியல் வளர்ச்சி இயக்கம் மூன்றாம் ஆண்டு நிறைவு யோகா நூல் வெளியீடு விழா நல்லாசிரியர் நன்மாணக்கர் பாராட்டு விழா என முப்பெரும் விழா திருப்பனந்தாளில் அறிவியல் வளர்ச்சி இயக்கம் பாரத பிரதமர் விருது பெற்ற பாதுகாப்புத்துறை விஞ்ஞானி பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் பாண்டியராஜன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திருப்பனந்தாள் காசிமட அதிபர் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் நல்லாசிரியர் மற்றும் நன்மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.