tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கையில் அனைத்து மாநில மொழிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கிடக் கோரிக்கை

புதுக்கோட்டை, ஜூலை 8-  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 14-ஆவது மாநாடு கறம்பக்குடியில் கடந்த சனி, ஞாயிறுகளில் நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலை வர் அ.மணவாளன் தலைமை வகித்தார். பேரணியை பி.வில்லி யம்மோசஸ் தொடங்கி வைத்தார். உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக் குழு அமைப்பாளர் என். கண்ணம்மாள், அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் லெ. பிரபாகரன், மாவட்டச் செயலாளர் எம். வீரமுத்து, ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் பி.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற உதவி தொடக்கக்கல்வி அலு வலர் எஸ்.திருமேனிநாதன், தமுஎகச மாவட்டச் செயலாளர் சு.மதியழகன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். அறிவியல் இயக்க முன்னோடி சி.எஸ்.வள்ளல் குடும்பத்திற்கு நிதி அளித்து கே.சற்பிரசாதம் பேசினார். கவிஞர் ஜீவி, பேராசிரியர் வி.சுகு மாறன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பும் நடைபெற் றது. முன்னதாக ஒன்றியச் செயலாளர் மு.சாமியப்பன் வரவேற்க, மாவட்ட இணைச் செயலாளர் எம்.சிவானந்தம் நன்றி கூறினார்.  ஞாயிறு நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டை தொடங்கி வைத்து மாநி லச் செயலாளர் எஸ்.டி.பால கிருஷ்ணன் உரையாற்றினார். ஆர். விவேகானந்தன் பேசினார். தலைவ ராக கே.சதாசிவம், துணைத் தலை வர்களாக அ.மணவாளன்,  எம்.வீர முத்து, எம்.குமரேசன், வி.விமலா, எஸ். சேதுராமன், கே.சற்பிரசாதம், செயலா ளராக எம்.முத்துக்குமார், இணைச் செயலாளர்களாக கே.ஜெயராம், கே.உஷாநந்தினி, ஏ.செல்வராஜ், எம்.சிவானந்தம், பார்வதி, துரையரசன், பொருளாளராக இ.பவுனம்மாள் ஆகி யோர் புதிதாக தேர்வு செய்யப்பட்ட னர்.  புதிய நிர்வாகிகளை வாழ்த்தி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். ராஜ்குமார் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எம்.எஸ்.ஸ்டீ பன்நாதன் பேசினார்.  காவிரி டெல்டா பகுதி விவ சாயத்தை காவுவாங்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் முற்றிலுமாக கைவிட வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக் கொள்கையில் அனைத்து மாநில மொழிகளுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.