திருச்சிராப்பள்ளி, ஜூன் 27- திருச்சி ஜங்சன் பிராட்கேரேஜ் ரயில்வே ஒப்பந்த தொழிலாளர் சங்க புதிய கிளை துவங்க விழா புதனன்று நடைபெற்றது. துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் ராஜூ தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், டிஆர்இயு ஓப்பன் லைன் பொதுச்செய லாளர் கரிகாலன், அகில இந்திய எல்ஐசி முகவர் சங்க தென் மண்டல செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி, துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். புதிய தலைவராக ராஜகுமாரி, செயலாளராக முத்து லெட்சுமி, பொருளாளர் கலைவாணி, துணைத்தலைவர் மஞ்சுளா, துணை செயலாளர் துர்காராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், தற்போது வழங்கப் படும் ரூ.300-க்கு பதிலாக அரசு நிர்ண யித்த குறைந்தபட்ச கூலி ரூ.487 வழங்க வலியுறுத்தி ரயில்வே நிர்வாகம் மற் றும் தொழிலாளர் நலத்துறையிடமும் மனு கொடுப்பது. 8 மணி நேரம் வேலை மற்றும் பணி பாதுகாப்பு உபகர ணங்கள் போன்ற அடிப்படை கோரிக் கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.