tamilnadu

img

சிபிஎம் சார்பில் அரசியல் வகுப்புகள்

நாகப்பட்டினம், ஜூன் 2-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் இருநாள் அரசியல் வகுப்புக் கூட்டம் நடைபெற்றது. முதல் அமர்வுக்குக் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.முத்துப்பெருமாள் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி வாழ்த்துரை வழங்கினார். முதல் அமர்வில் இடது ஜனநாயக அணி” என்னும் பொருளில் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் கருத்துரையாற்றினார்.இரண்டாம் அமர்விற்கு கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன் தலைமை வகித்தார். மார்க்சீய அரசியல் பொருளாதாரம் எனும் பொருளில் எஸ்.விவேகானந்தன் விளக்கவுரையாற்றினார். மூன்றாம் அமர்விற்கு நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு தலைமை வகித்தார். கட்சித் திட்டம் எனும் பொருளில் மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். இரண்டாம் நாள் முதல் அமர்விற்குக் மாவட்டக்குழு உறுப்பினர் மா.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மார்க்சீயத் தத்துவம் எனும் பொருளில் மாநிலக்குழு உறுப்பினர், எழுத்தாளர் எஸ்.ஏ. பெருமாள் சிறப்புரையாற்றினார்.நிறைவாக இரண்டாம் அமர்வுக்கு மாவட்டக்குழு உறுப்பினர் எம்.என்.அம்பிகாபதி தலைமை வகித்தார். ”கட்சியும் வர்க்க வெகுஜன ஸ்தாபனங்களும் என்ம் பொருளில், மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி விளக்கவுரையாற்றினார். 

;