tamilnadu

img

ஓய்வூதியப் பணப் பலன்களை உடனடியாக வழங்க கோரிக்கை 

 திருச்சிராப்பள்ளி, செப்.3- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் செவ்வாய் அன்று மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது. பொதுச்செயலாளர் கர்சன் ஓய்வூதியர்களின் மிக முக்கியமான உரிமைகளான பஞ்சப்படி, ஓய்வு கால பணப் பலன்கள், ஒப்பந்தங்கள், மருத்துவ காப்பீடு குறித்து பேசி அறிக்கையை தாக்கல் செய்தார். மாநில பொருளாளர் வரத ராஜன் வரவு- செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.  கூட்டத்தில், நடத்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் 2018 முதல் 2019 மார்ச் முடிய ஓய்வு பெற்ற போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு ரூ1093.65 கோடி ஒதுக்கி பணப்பலன் வழங்கப்படும் என அறிவித்தார். அரசாணையும் வெளியிடப்பட்டது. போக்குவரத்து செயலாளர் ஒருவார காலத்திற்குள் பணப்பலன் வழங்க வேண்டும் என உத்த ரவு போட்டு 15 நாட்கள் ஆகியும் இதுவரை வழங்கப்படவில்லை.  எனவே அரசும், நிர்வாகமும், அரசு உத்தரவுப்படி ஓய்வூதி யர் பணப்பலன்களை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்றே அன்றே வழங்க வேண்டிய பணப்பலன்களை வருடகணக்கில் அலைக்கழிக்காமல் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர்கள் சண்முகம், செல்வ ராஜ், மாநில உதவி தலைவர்கள் சின்னசாமி, ரெய்மண்ட் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்