தூத்துக்குடி, மே 12-ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டுகாவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் உட்பட 4 சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 19ஆம் தேதி இடைத்தேர்தல்நடைபெற உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தல் பாதுகாப்புபணியில் ஈடுபடும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு எட்டையபுரம் சிகேடி பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 571 வாக்குகளில் மாலை 5 மணி வரை மொத்தம் 448 வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.