தஞ்சாவூர், ஜூன் 20- தஞ்சாவூர் மாநகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதி யத்தில், பல லட்சம் மோசடி நடை பெற்றுள்ளதாக குற்றம்சாட்டி, மாநகராட்சி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்(சிஐடியு) சார்பில், வியா ழக்கிழமை மாநகராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டு நூற்றுக்க ணக்கான தொழிலாளர்கள் போராட் டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே. அன்பு தலைமை வகித்தார். செயலா ளர் சி.ஜெயபால் தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்டத் தலைவர் து. கோவிந்தராஜூ வாழ்த்திப் பேசி னார். உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஜேசு தாஸ், மாவட்ட தலைவர் ஐ.இமானு வேல், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.மில்லர் பிரபு, மாவட்டத் தலைவர் ஆர். மணிமாறன், பொருளாளர் ஏ.ராஜா, ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகி கள் ஜெயபிரகாஷ், எட்வர்ட் தனராஜ், எம்.சிவகுமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி பம்ப் ஆப்ரேட்டர் 24 ஒப்பந்தத் தொழிலாளர்கள் 3 மாத(2018 ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) சம்பள பாக்கித் தொகை ரூ.18 ஆயி ரத்தை மார்ச் 27 க்குள் வழங்கு வதாக அமைதிப் பேச்சுவார்த்தை யில் ஒப்புக் கொண்டதை உடனே நிறைவேற்ற வேண்டும். உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவுப் படி இபிஎப், இஎஸ்ஐ பணத்தை உடனே செலுத்த வேண்டும். ஒப் பந்த தொழிலாளர்கள் ஊதியத்தை வழங்காமல், ஏமாற்றி கூட்டாக முறைகேட்டில் ஈடுபடும், மாநக ராட்சி பொறியாளர், உதவிப் பொறி யாளர், எம்.எஸ்.ஜி இன்ப்ரா நிறுவன ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன.