திருச்சிராப்பள்ளி, செப்22- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புறநகர் மாவட்டக்குழு சார்பில் புள்ளம்பாடி ஒன்றிய பேரவை கூட்டம் புள்ளம்பாடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு செஞ்சுடர் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் கோமதி துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் மல்லிகா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தலைவராக திலகா, செயலாளராக கல்லகம் மல்லிகா, பொருளாளராக ரீனா உள்பட 12 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.