tamilnadu

img

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்...

திருச்சி மாநகரில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக் குழு சார்பில் ஜூலை 21 செவ்வாயன்று 64 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச் செல்வன், இடைக் குழு செயலாளர்கள் வேலுச்சாமி, மணிமாறன், சங்கர் உள்ளிட்டோர் பல்வேறு மையங்களில் தலைமையேற்று உரையாற்றினர். திருச்சி மாநகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு வீடு வீடாக சென்று சோதனை நடத்த வேண்டும்; கூடுதல் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்; திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் கூடுதல் பரிசோதனையும், படுக்கைகள் மற்றும் மருந்துகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்; சித்தா, ஹோமியோ மருந்தகங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்; கொரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவு, மருந்துகள், சுடுநீர், கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும்; மாநகரில் உள்ள 18 சுகாதார நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும்; குறைந்தபட்சம் நடமாடும் பரிசோதனை வாகனங்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்; நான்கு கோட்டங்களிலும் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

;