கும்பகோணம் மே 17-தமிழ்நாடு போட்டோ& வீடியோகிராபர்ஸ் அசோசியேசன் சார்பில் கும்பகோணம் ராயா கார்டனில் போட்டோ பயிற்சி பட்டறை ஒருநாள் சிறப்பு வகுப்பு நடைபெற்றது. அவ்வமைப்பின் தலைவர் டி.செல்வபாண்டியன் தலைமையில் சங்க செயலாளர் பா.செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில்.திண்டிவனம் கிளிக்கர்ஸ் கிளப் சீனிவாசராவ் பயிற்சி அளித்தார். இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழா சங்க பொருளாளர் எம்.கேசிவா நன்றி கூறினார்.