tamilnadu

கரூர் ,கும்பகோணம் மற்றும் சீர்காழி முக்கிய செய்திகள்

ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் கரூர் எஸ்.பி.யிடம் முறையீடு

கரூர், ஜூன் 26- அபராதம் விதிப்பதை தவிர்க்க வலியுறுத்தி கரூர் நகர ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பா ளரிடம் முறையிட்டனர். கரூர் நகர பகுதிக்குள் 50-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளை அவர்கள் விரும்பும் இடங்களில் இறக்கி விட வேண்டிய நிர்ப்பந்தம் இருப்ப தால் நகரின் முக்கிய பகுதிகளில் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றி வருகிறார்கள். இது போன்ற சமயங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி போக்குவரத்து காவலர்கள் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். அவ்வாறு விதிக் கப்படும் அபராதத்திற்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை என குற்றம் சாட்டும் ஓட்டுநர்கள், இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிட்டனர். இவர்களது குறைகளை கேட்ட மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் விக்ரமன், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பொது வான ஒரு இடம் ஒதுக்கி தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததின் பேரில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் கலைந்து சென்றனர்.

மகாலிங்க சுவாமி கோயில் கட்டளை ஆதினத்துக்கு மிரட்டல்

இரண்டு பேர் கைது

கும்பகோணம், ஜூன் 26-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிடை மருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மகா லிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்கு கட்டளை ஆதீனமாக சுவாமிநாத தம்பிரான் மகாலிங்க சுவாமி கோவிலை நிர்வகித்து வருகிறார்.  இவர் பொறுப்பேற்றது முதல் கோவிலுக்கு சொந்தமான குளங்கள் தூர் வாருதல், கோவில் இடத்திற்கான குத்தகை பாக்கி வசூல் செய்தல் போன்ற பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் செவ்வாயன்று மாலை கட்டளை சுவாமிகள் சுவாமிநாத தம்பிரானை, மதுபாலன் மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.  இதுபற்றி கட்டளை சுவாமிகள் கொடுத்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் காவல்துறையினர் மதுபாலன்(20), ஹரி ஹரன்(20) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கோவில் நிலத்தில் இருந்த ஆக்கிர மிப்புகளை அகற்றியதால் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
 

இலக்கிய மன்ற தொடக்க விழா

சீர்காழி, ஜுன் 26- நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி எஸ்.எம்.எச்.மெட்ரிக் பள்ளியில் மாணவர் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடை பெற்றது. விழாவிற்கு பள்ளிச் செயலர் கயிலை மணி எஸ்.ராம கிருஷ்ணன் தலைமை வகித்தார். தருமை ஆதினம் கலைக் கல்லூரி பேராசிரியை முனைவர் எஸ்.முத்துலட்சுமி இலக்கிய மன்ற நிகழ்வுகளைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  பத்தாம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற உழைத்த ஆசிரி யர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவி களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாக அலு வலர் எம்.தங்கவேலு, முதல்வர் கே.தங்கதுரை மற்றும் துணை முதல்வர்கள் மாதவன், கிரிஜாபாய், உஷா, ஜெயஸ்ரீ ஆகி யோர் செய்திருந்தனர்.

;