tamilnadu

img

குண்டும் குழியுமாக மாறிய அயப்பாக்கம் - ஆவடி சாலை

அம்பத்தூர், ஜூலை 2- அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கத்தி லிருந்து ஆவடி செல்லும் பிராதான சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. அயப்பாக்கம், கோணம்பேடு, ஐசிஎப் காலனி, எழில் நகர், ராஜலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அதே போல் ஆவடி காமராஜர் நகர், ஜே.பி. எஸ்டேட், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு உள்ளிட்ட பகுதி களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அயப்பாக்கம் பகுதி யில் இருந்து ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர் செல்பவர்கள், பட்டாபிராம், ஆவடி ஆகிய பகுதியில் உள்ளவர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை, அண்ணா நகர் செல்ல வேண்டும் என்றால் இந்தச் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.  மேலும் இச்சாலையில் தனியார் பொறியியல் கல்லூரியும், பள்ளிகளும் உள்ளன. இதனால் எந்நேர மும் போக்குவரத்து அதிக மாக உள்ள பகுதியாகும். இந்த சாலையில் ஏறக்குறைய 3 கி.மீ. வரை சாலையின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக  உள்ளது. சிறு மழை பெய்தால் கூட சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும், சாலையில் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கும். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் சாலையில் ஆங்காங்கே ஆறாக ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். முதியவர்கள், பெண்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.  இரவில் இருசக்கர வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து, காயம் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். எனவே ஆவடி பெருநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விரைந்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடி யாக மழை நீர் கால்வாய் அமைக்க வேண்டும், மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.  சமீபத்தில் ஆவடி பெருநகராட்சி, மாநகராட்சி யாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.