tamilnadu

img

உயிர் உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

சீர்காழி, ஜன.18- நாகை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன், விவ சாயிகளுக்கு மானிய விலையில் உயிர் உரங்களை வழங்கி பேசுகையில், கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் தேவையான அளவுக்கு பாஸ்போபேக்டீரியா, ரைசோ பியம், அசோஸ்பயிரில்லம் இதர டோமோனாய். டி.வெரிடி ஆகிய உயிர் உரங்கள் மற்றும் பயோ உயிர் நோய் மருந்துகள் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது. இந்த அனைத்து உயிர் உரங்களும் ரசாயன உரங்கள் அதிகம் இடுவதை தவிர்க்கிறது. வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு கொடுக்கிறது. டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் ஆகிய உரங்கள் போடப்பட்ட வயலில் தேங்கியுள்ள மணிச்சத்துக்களை பாஸ்போ பேக்ட்டீரியா தேவையான அளவு சத்தினை பயிருக்கு கொடுக்கிறது.  பயிரில் வேர் முடிச்சுகளை உண்டு பண்ணி பயிருக்கு தேவையான சத்தினை ரைசோபியம் உயிர் உரம் கொடுக்கிறது. விதை நேர்த்தி செய்யும் போது உயிர் உரங்களை கலப்பதன் மூலம் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு பயிர் நன்கு வளரும். எனவே இயற்கை உயிர் உரங்களை பயன் படுத்தி ரசாயன உரங்களை குறைத்து பயனடையலாம் என்றார். வேளாண் அலுவலர் விவேக், உதவி அலுவ லர்கள் வேதையராஜன், சவுந்தர்ராஜன், குடோன் மேலாளர் திருமாவளவன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

;