tamilnadu

img

இந்தியன் வங்கியின் காலாண்டு நிகர லாபம் ரூ.322 கோடி

முசிறி, மே 16-திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலையம் அருகில்செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி கிளை தற்போது முசிறியில் துறையூர் சாலையில் அமலா மேல்நிலைப்பள்ளி அருகில் புதிய கட்டிடத்தில் இடம் மாற்றப்பட்டு அதன் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி மண்டல துணைபொதுமேலாளர் வை.சுவாமிநாதன் தலைமை தாங்கி புதியகட்டிடத்தை திறந்துவைத்து பேசினார். வங்கி கிளை மேலாளர் க.குருசாமி வரவேற்று பேசினார். முன்னதாக விவசாயகடன், மகளிர் சுயஉதவிகுழுகடன், வீட்டுக்கடன், சிறுதொழில் கடன் உள்பட 154 நபர்களுக்கு ரூ.3 கோடியே 1 லட்சம் மதிப்பிலான காசோலைகளை மண்டல துணை பொதுமேலாளர் சுவாமிநாதன் வழங்கி பேசுகையில் முசிறியில் கிளை தொடங்கி 45 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. தற்போது வாடிக்கையாளர்களின் சிரமத்தை போக்கிட புதிய கட்டிடத்தில் வங்கியைதிறந்து வைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியன் வங்கி தொடங்கி 112 ஆண்டு நடைபெறுகிறது. இந்தியன்வங்கியின் மொத்த வர்த்தகம் 4 லட்சத்தி 30 ஆயிரம் கோடி ஆகும். இதில் 2 லட்சத்தி 42 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையில் இந்தியன் வங்கி முதன்மையாக திகழ்கிறது. இந்த காலாண்டு நிகர லாபமாக 322 கோடி இலக்குஅடைந்துள்ளது. வங்கியின் வளர்ச்சிக்கு வாடிக்கையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றுஅவர் பேசினார். விழாவில் பல்வேறு கிளை மேலாளர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் உள்படதிரளானோர் கலந்து கொண்டனர். உதவி பொதுமேலாளர் ராஜாமணி நன்றி கூறினார்.

;