tamilnadu

img

தினக் கூலி உயர்வை உடனே அமல்படுத்துக! துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.14- துப்புரவு தொழிலாளர்களின் தினக்கூலியை ரூ 360லிருந்து ரூ500ஆக உயர்த்தி கடந்த 1.4.19 அன்று மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார். ஆட்சியரின் உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும். கடந்த 6 மாதத்திற்கான அரியர் தொகையை உடனே வழங்க வேண் டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர் சங்க திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் திங்க ளன்று மாநகராட்சி அலுவலக வளா கத்தில் போராட்டம் நடத்த திட்டமி டப்பட்டிருந்தது. அதன்படி துப்புரவு தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் தலை மையில் 350 க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் திங்களன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். அவர்களை, மாநகராட்சி அலுவலக வாயிலிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளே அனு மதிக்க மறுத்தனர். இதனால் துப்பு ரவு தொழிலாளர்கள் திடீர் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அனைவரையும் மாநகராட்சி அலுவலக வளா கத்திற்குள் காவலர்கள் அனுமதித்த னர். பின்னர் துப்புரவு தொழிலா ளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். மாநகராட்சி உதவி ஆணையர்(நிதி) திருஞானம், ஆணையரின் நேர்முக அலுவலர் சண்முகம் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன், மாவட்ட தலைவர் இளையராஜா, மாவட்ட பொறுப்பாளர் ராஜூ, மாவட்ட பொரு ளாளர் விஜயன், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட துணைத்தலைவர் நாக ராஜ், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை யில், மாவட்ட ஆட்சியர் அறிவித்த சம்பளம் மற்றும் 6 மாத கால அரியர் பணத்தை வரும் 27-ம் தேதிக்குள் வழங்குவது என முடிவானது. இதை யடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

;