tamilnadu

img

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி எச்சரிக்கை

 திருச்சிராப்பள்ளி, செப்.17- பல மடங்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரி, கடை வரி, சொத்து வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். திருச்சி அரசு மருத்துவமனை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள், பணியா ளர்கள், மருத்துவக் கருவிகள், மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காவேரி, கொள்ளிடம், உய்ய கொண்டான் ஆறு, குடமுருட்டி உள் ளிட்ட ஆறுகளில் சாக்கடை கலந்து கூவமாக மாறுவதை தடுக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலை யத்தை உருவாக்க வேண்டும். ஜங் ஷன் மேம்பால பணியை விரைந்து முடித்திட ராணுவ இடத்தை கேட்டுப் பெற வேண்டும். துவாக்குடி- பால் பண்ணை வரையிலும், பொன் மலை ஜி கார்னரிலும், சென்னை நெடுஞ்சாலை சர்க்கார்பாளையம் அருகில் சுரங்கப்பாதைகள், சர்வீஸ் சாலைகள் அமைத்து கொடுக்க வேண்டும். அரை வட்ட சாலை பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டும். மாநகராட்சி அனைத்து வார்டு களுக்கும் பாதாள சாக்கடை திட் டத்தை விரிவுபடுத்த வேண்டும். ஸ்ரீரங்கத்தில் பல தலைமுறையாக வசிக்கும் மக்களுக்கு அடி மனை பட்டா வழங்கி பத்திரப்பதிவு தடை யை நீக்க வேண்டும் என்பன உள் ளிட்ட திருச்சி மாநகர மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய் அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரு கில் தர்ணா போராட்டம் நடை பெற்றது.  போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.  போராட்டத்தை மாநிலக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தொடங்கி வைத்து பேசி யதாவது:  இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று வந்த முதலமைச்சர் உள்ளாட்சி தேர் தலை நடத்துவதற்கு முடியாமல் அமர்ந்திருக்கிறார். உள்ளாட்சி தேர்தலே நடத்தாமல் மக்கள் சபை யை கூட்டாமல் சொத்து வரி 100 சதமாக உயர்த்தப்பட்டு வரி வசூல் செய்வது என்பது ஆங்கிலேயர் ஆட்சியில் கூட நடக்கவில்லை. ஆனால் அதிமுக ஆட்சியில் இது நடந்து கொண்டிருக்கிறது. இதை அனுமதிக்க முடியாது என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் எச்சரிக்கை விடுக்கின்றோம்.  உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து நீதிமன்றம் பல தடவை கேட்டுள்ளது. நீதிமன்றம் கேட்கும் போதெல்லாம் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கும் என்று தமிழக அரசு பதிலளித்து வருகிறது.  அனைத்து நகராட்சி, பேரூ ராட்சிகளிலும் தண்ணீர் வியாபா ரம் அமோகமாக நடைபெற்று வரு கிறது. இதன் மூலம் பல லட்சம் ரூபாய் கமிஷன் பெறப்படுகிறது. ஒருபுறம் வறட்சி மழை இல்லை என சொல்லிக் கொண்டே, தனி யார் நிறுவனங்கள் தண்ணீர் விற்ப னையை மிக தீவிரமாக நடத்தி வரு கின்றனர். ஆகவே இந்த தண்ணீர் விற்பனை உள்பட தனியாருக்கு கொள்ளை லாபம் அடிப்பதற்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதும் பயன்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.  போராட்டத்தை விளக்கி மாநி லக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேசி னார். போராட்டத்தை முடித்து வைத்து மாநில செயற்குழு உறுப்பி னர் லாசர் பேசினார். போராட் டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.சி.பாண்டியன், ரங்க ராஜன், வெற்றிச்செல்வன், ஜெய பால், லெனின், பகுதிக்குழு செயலா ளர்கள் வேளாங்கண்ணி, வேலுச் சாமி, கார்த்திகேயன், சங்கர், வினோத் மணி, மணிமாறன், சிவ குமார், இளையராஜா உள்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.

;