tamilnadu

img

நிதி அளிப்பு பொதுக்கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டக் குழு சார்பில் தாத்தையங்கார்பேட்டை ஒன்றியம் துலையாநத்தம் கிளை சார்பில் நிதி அளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிளை செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர் வீரவிஜயன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.