tamilnadu

img

திருச்சி உப்பிலியபுரத்தில் முன்னாள் ராணுவ வீரர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 ஏக்கர் நிலம் தானமாக வழங்கினார்....

திருச்சிராப்பள்ளி:
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையன் பிள்ளை என்பவர் 16 ஆண்டுகள் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுடன் நட்புறவோடு இருக்கிறார்.

அவரது மனைவி க.பரமேஸ்வரி, முன்னாள் எம்எல்ஏ தோழர் க.பீமாராவ் தலைமையில், விமான விரிவாக்கத்திற்காக ஏழை-எளிய மக்களின் வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக நூற்றுக்கணக்கான பெண்களை திரட்டிப் போராடினார். அவரது மறைவுக்கு பிறகு இன்று வரை மார்க்சிஸ்ட் கட்சியோடு கருப்பையன் பிள்ளை நெருக்கமான உறவோடும் கட்சி இயக்கங்களில் பங்களிப்புடன் இருக்கிறார்.தற்போது அவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் (தற்போதைய மதிப்பு ரூ.50 லட்சம்)உப்பிலியபுரம் வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ளது. உழைக்கும் மக்களுக்காக போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த நிலத்தை முழுவதுமாக கொடையாக வழங்க விருப்பம் தெரிவித்தார். 

அதன்பேரில் பிப்.19 (வெள்ளி) அன்று உப்பிலியபுரம் சார்பதிவகத்தில் உழைக்கும் மக்கள் அறக்கட்டளை பெயரில் மேற்படி ஐந்து ஏக்கர் நிலம் முழுவதையும் பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாநிலக் குழு உறுப்பினர்கள் க.பீமாராவ், உதயகுமார், புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.பழநிசாமி, ஆலந்தூர் பகுதிச் செயலாளர் ஹரிகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சம்பத், உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் டி.முத்துக்குமார், துறையூர் ஒன்றியச் செயலாளர் எம்.ஆனந்தன், ஒன்றியக் கவுன்சிலர் ஆர்.முத்துக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தோழர் கருப்பையன் பாராட்டி கவுரவிக்கப்பட்டார்.

;