tamilnadu

img

நிதிசார் கல்வி விழிப்புணர்வுப் பயிற்சி

மன்னார்குடி டிச.13- இந்தியன் வங்கியின் திருவாரூர் மண்டல அலுவலகமும், மன்னம்பந்தல் ஏ.வி.சி கலைக்கல்லூரி வணிகவியல் துறையும் இணைந்து வணிகவியல் மாணவ மாணவிகளுக்கான நிதிசார் கல்வி பயிற்சியை புதன்கிழமை நடத்தின.  பயிற்சியில் இந்தியன் வங்கியின் திருவாரூர் மண்டலத்தின் துணை மண்டல மேலாளர் மு.செல்வவிநாயகம் பங்கேற்று நிதிசார் கல்வி மற்றும் வங்கிச் சேவைகள் குறித்து பயிற்சி அளித்தார். வங்கியின் சேமிப்பு கடன், காப்பீடு, ஓய்வூதியம் போன்ற பல்வேறு சேவைகள் குறித்து விளக்கிக் கூறினார். இதில் ஏ.வி.சி கல்லூரி செயலாளர் கே.கார்த்திகேயன், முதல்வர் ஆர்.நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி ஏ.வி.சிகல்லூரி வளாகக் கிளை மேலாளர் எம்.பத்மநாபன், கல்லூரி முதன்மையர் எஸ்.மயில்வாகனன், வணிகவியல் துறைத்தலைவர் எம்.மதிவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.