tamilnadu

img

வேகத்தடைக்கு பெயிண்ட் அடிக்க வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 28- திருச்சி திருவானைக்காவல் மேம்பாலம் அருகே நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடைக்கு வெள்ளை கோடுகள் வரைந்து அடையாளப் படுத்தாததால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளை தவிர்க்க பெயிண்ட் அடிக்க கோரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நிதியை காரணம் காட்டி பெயிண்ட் அடிக்காததை கண்டித்து, பெயிண்ட் அடிக்க நிதி வழங்குவதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சனிக்கிழமை திருவானைக்காவல் மெயின் ரோட்டில் துண்டை விரித்தும், கையில் தட்டை ஏந்தியும் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட குழு உறுப்பினர் சுப்ரமணி, ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் அன்புசெல்வன், பகுதி தலைவர் ஜீவன், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.  தகவலறிந்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தீபிகா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் 2 நாட்களில் வேகத்தடையில் பெயிண்ட் அடிப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

;