தஞ்சாவூர், ஜூலை 2- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லரின் ஆசிரியர் விரோதப் போக்கைக் கண்டித்து தஞ்சையில் பனகல் கட்டி டம் முன்பு ஜாக்டோ- ஜியோ சார்பில் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ- ஜியோ மாநில உயர்மட் டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரி யர்கள் கழகத்தின் மாநில பொதுச் செயலாளருமான மனையேறிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியருமான மா.ரவிச்சந்திரன், தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்பட்ட கூட்டத்தில் மாணவர்கள் நலன் கருதி கோரிக்கை வைத்ததற்காகவும், தமிழக அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறி விப்புகள் நிறைவேற்றப்படாமல், வெற்று அறிவிப்பாக உள்ளதே என கேள்வி எழுப்பியதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் பழி வாங்கும் நோக்கத்துடன் கடந்த ஜூன் 27 அன்று தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டார். இதனைக் கண்டித்தும், தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் இளையராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலை மையாசிரியர் கழக மாவட்டச் செயலா ளர் டி.எஸ்.ஆர்.கருணாநிதி, முதல் வன், அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் மண்டல செயலாளர் பேராசிரியர் கோவிந்தராசு, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரி யர் கழகம் மாவட்டத் தலைவர் முரளி தரன் மற்றும் தோழமை சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டு கண்டன உரை யாற்றினர். மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் ஏ.ரெங்கசாமி நிறைவுரையாற்றி னார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்க ணக்கானோர் கலந்து கொண்டு கண் டன முழக்கங்களை எழுப்பினர். \
நாகப்பட்டினம்
நாகை அரசு ஊழியர் சங்கக் கட்டி டம் முன்பாக திங்கட்கிழமை மாலை தொடர் முழக்கப் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ப.அந்து வன்சேரல் தலைமை வகித்தார். நாகை வட்டச் செயலாளர் எம்.தமிழ்வாணன் வரவேற்றார். சி.ஐ.டி.யு. நாகை மாவட்டச் செயலாளர் சீனி.மணி துவக்கவுரையாற்றினார்.மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் விளக்க வுரையாற்றினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செய லாளர் து.இளவரசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தியாக ராஜன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.துர்கா ம்பிகா, ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநிலப் பொருளாளர் நாகராஜன், தரங்கம்பாடி வட்டத் தலைவர் எம்.தட்சிணாமூர்த்தி, மயிலாடுதுறை வட்டப் பொருளாளர் வெங்கடேசன், கீழ்வேளூர் வட்டத் தலைவர் மோகன், நாகை வட்டத் தலைவர் சி.பாலசுப்பிரமணியன், சீர்காழி வட்டத் துணைத் தலைவர் வேல்.கண்ணன், குத்தாலம் வட்டத் தலைவர் சாமி.மனோகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஊரக வளர்ச்சித்துறை அலு வலர் சங்க மாநிலச் செயலாளர் அ. சௌந்தரபாண்டியன் நிறைவுரை யாற்றினார். மாவட்ட இணைச் செய லாளர் எம்.நடராஜன் நன்றி கூறினார்.