tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்கள் மனுத் தாக்கல்

மன்னார்குடி, டிச.13- மன்னார்குடி ஒன்றியக்குழுவின் சார்பில் திருவாரூர் மாவட்ட ஒன்றியக் கவுன்சில் உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் மன்னார்குடியில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.  முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் ஒன்றிய செயலாளர் எம். திருஞானம் தலைமையில் மன்னார்குடி தேரடியி லிருந்து ஊர்வலமாக மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றடைந்தனர்.  பின்னர் 19வது வார்டு பரவாக் கோட்டை ஒன்றிய கவுன்சில் உறுப்பின ருக்காக வேட்பு மனுவினை போட்டி யிடும் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பி னர் யு. மார்க்ஸ் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜே. இளங்குமரனிடம் அளித்தார். 8-வது வார்டு பெரிய கொத்தூர் ஒன்றியக் கவுன்சில் உறுப்பி னருக்கான தேர்தல் வேட்பு மனுவினை போட்டியிடும் கட்சி உறுப்பினர் தி. கனகம்  உதவி தேர்தல் நடத்தும் அலுவ லகர் பி. கலைச்செல்வியிடம் அளித்தார். ஒன்றிய செயலாளர் எம். திருஞானம், ஆர். சாமித்துரை, எஸ். மின்னல்கொடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அறந்தாங்கி 

புதுக்கோட்டை மாவட்டம் மன மேல்குடி ஒன்றியம் தண்டலை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பழனிச்சாமி மனைவி அஞ்சம்மாள் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். சிபிஎம் மணமேல் குடி ஒன்றிய செயலாளர் கரு.ராமநாதன் மற்றும் ஊர் பிரமுகர்கள் உடனி ருந்தனர். 

வலங்கைமான்

திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிராமப் பஞ்சாயத்து பொறுப்புகளுக்கு, ஊராட்சித் தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டி யிடும் கட்சியினர் திரளாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் என்.இராதா சாரநத்தம் ஊராட்சி மன்ற தலைவருக்கும், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ். இளங்கோ வன் பூனயிருப்பு ஊராட்சி மன்ற தலைவருக்கும், ஆர்.ஜே.நடராஜன், மாணிக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவருக்கும், ஜெயராஜ் வித்யா கீழவிடையல் ஊராட்சி மன்ற தலைவருக்கும் போட்டியிடுகின்றனர். இதே போல் சாரநத்தம், ஆரையூர், மாணிக்கமங்கலம் ஆகிய கிராம ஊராட்சி பகுதி ஒன்றிய கவுன்சிலருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்பிர மணியன்  போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடும் அனைவரும் வலங்கை மான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழுர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் எ.தங்கராசு, தா.பழுர் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.இளங்கோவன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஒன்றியக்குழு என்.பழனிவேல், சக்கரவர்த்தி ஆகி யோர் உடனிருந்தனர். 

ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மீனா, ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவல கத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக  வேட்பு மனு தாக்கல் செய்தார். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாஜலம் அருணகிரிநாதன் ஆகியோர் உடனிருந்தனர். அரியலூர் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ர.அகிலா வேட்புமனு தாக்கல் செய்தார். ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்க டாஜலம், மாதர் சங்க ஒன்றியச் செயலா ளர் பல்கீஸ்  ஆகியோர் உடனி ருந்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை ஒன்றியம், கரம்பயம் ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பிற்கு, செ. சைதாம்பாள் செல்வம், தம்பிக்கோட்டை வடகாடு ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பிற்கு சிஐடியு  மாவட்ட நிர்வாகி எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் வெள்ளிக்கிழமை பட்டுக் கோட்டை ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில், தேர்தல் அலுவலர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ். தமிழ்செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வம், ஒன்றிய செயலாளர் எஸ். கந்தசாமி, ஏ. கோவிந்த சாமி, முருக சரவணன், பெஞ்சமின், கிறிஸ்துதாஸ், கே. செந்தில், குலோத்துங்கன், தமிழ்ச்செல்வன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர். சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், மணக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பிற்கு சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பை யா வேட்புமனுத் தாக்கல் செய்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா ளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி மற்றும் நீலகண்டன், இளங்கோ, சின்னப்பா, ஆறுமுகம், தனபால், முத்தையா உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர். 

பொன்னமராவதி 

பொன்னமராவதி ஒன்றியத்தில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பா ளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். ஆர்.அழகுமீனாள் மேலைச்சிவபுரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.ராஜாவின் மனைவியா வார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன், ஒன்றிய குழு உறுப்பி னர் பி.ராமசாமி, சிஐடியு மாவட்ட பொறுப்பாளர் ஏ.தீன், கிளை செயலா ளர்கள் அழகு, ஆறுமுகம், அழகப்பன், பிச்சான், ஊர் அம்பலம் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  ஒளியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  என்.நவமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் கட்சியின் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.நல்லதம்பியின் மனைவியாவார். அரசமலை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.எல்.பிச்சை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
 

;