tamilnadu

img

சிபிஎம் மனுத் தாக்கல்

 திருச்சிராப்பள்ளி, டிச.15- திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் கே.கள்ளிக்குடி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக மற்றும் தோழமை கட்சிகளின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணிகண்டன் ஒன்றிய செயலாளர் சங்கர் போட்டியிடுகின்றார். இதை யொட்டி திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கூட்டணி கட்சி யினரை சந்தித்து ஆதரவு கேட்டார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெய பால், சிதம்பரம், மணப்பாறை வட்டச் செயலாளர் ராஜ கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.