தஞ்சாவூர், ஜூன் 29- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் செரு வாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார அளவில் சமுதாய சுகாதார செவிலியர் பொறுப்பிலும், பகுதி சுகா தார செவிலியராக பணி யாற்றிய வாசுகி பணி ஓய்வு பெற்றார். இதையொட்டி நடைபெற்ற பாராட்டு விழா விற்கு வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர ராஜன் தலைமைவகித்தார். வட்டார அளவில் உள்ள காலகம், குறிச்சி உள்ளிட்ட சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டு பாராட்டி பேசினர். செவிலி யர் வாசுகி ஏற்புரை யாற்றினார். நிறைவில் மருத்துவ மில்லா மேற்பார்வையாளர் கண்ணன் நன்றி கூறினார்.