tamilnadu

img

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு சிபிஎம், வாலிபர் சங்கம் நினைவு அஞ்சலி

திருச்சிராப்பள்ளி, மே 22 -தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளால் தங்களின் உயிர் வாழும் உரிமை பாதிக்கப்படுகிறது என ஜனநாயக வழியில் போராடிய அப்பாவி பொதுமக்களை, கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலியாக செயல்படும் மத்திய மோடி அரசும், மாநில எடப்பாடி அரசும் காவல்துறையைக் கொண்டு 15-க்கும் மேற்பட்டோரை சுட்டு வீழ்த்தியது. நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இன்று வரை நீதிக்காக மக்கள் போராடும் நிலை உள்ளது. தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று, ஓராண்டு கடந்த நிலையில், கொல்லப்பட்ட அறப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் புதன்கிழமை நடைபெற்றது. 

தஞ்சாவூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டக்குழு சார்பில், கணபதி நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில், புதன்கிழமை காலை தியாகிகள் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அஞ்சலி உரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.மாலதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சரவணன், அரவிந்தசாமி, மாநகரச் செயலாளர் என்.குருசாமி, அரசு ஊழியர் சங்கம் கோதண்டபாணி, மாநகரக்குழு உறுப்பினர்கள் அப்துல் நசீர், வடிவேலன் மற்றும் பல்வேறு அரங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

கும்பகோணம்\

கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு சிபிஎம் நகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜகோபாலன், நகரச் செயலாளர் பழ.அன்புமணி, ஜி.கண்ணன் மற்றும் அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மைய மாணவர்கள், சிபிஎம் கட்சியினர், சிஐடியு தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கரூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சக்திவேல், சி.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கா.கந்தசாமி, எம்.தண்டபாணி, ஆர்.ஹோச்சுமின், கே.வி.பழனிச்சாமி மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

திருச்சிராப்பள்ளி

வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் பகுதிக் குழுக்கள் சார்பில் காட்டூர், கிழக்கு, அந்தநல்லூரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அறந்தாங்கி

அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒன்றிய குழு சார்பாக மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. போராட்ட தியாகிகளின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.பாலசுப்ரமணியன், தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, நகரச் செயலாளர் கே.தங்கராஜ், வாலிபர்கள் -திராவிட கழகத்தினர் மற்றும் விடியலை தேடி இளைஞர் மன்றத்தினர் அஞ்சலி செலுத்தினர்.