திருச்சிராப்பள்ளி, செப்.11- சிஐடியு திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில் செவ்வாய் அன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சிஐடியு பொதுக்குழு முடிவுகள் குறித்து மாவட்ட நிர்வாகி விஜயன். புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சம்பத், நிர்வாகிகள் பழனிவேல், பழனிச்சாமி, பெல் அருணன், பரமசிவம், பூமாலை, சந்திரசேகர் உள்பட சிஐடியு சங்க இணைப்பு நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.