tamilnadu

கரூர் மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

சேரன் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

கரூர், ஏப்.29-

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கரூர் வெண்ணெய் மலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.நிரஞ்சனா 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். ஜெ.ஏ.பவதாரணி, எம்.சுதிபா ஆகியோர் தலா 485 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்தனர். மேலும் ஆர்.ராகுல் 484 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும், பி.ஆசபாரதி 483 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடமும் பெற்றனர். இந்த பள்ளியில் தேர்வு எழுதிய 475 மாணவ, மாணவிகளும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். அதுமட்டும் இல்லாமல் கணிதப் பாடத்தில் ஒருவரும், அறிவியல் பாடத்தில் இருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளையும் ஆசிரியர்கள், பள்ளியின் தலைவர் பி.எம்.கருப்பண்ணன், தாளாளர் பி.எம்.கே.பாண்டியன், பள்ளி ஆலோசகர் பி.செல்வதுரை, நிர்வாகி பெரியசாமி, பள்ளி முதல்வர் வி.பழனியப்பன் ஆகியோர் பாராட்டினர். 


மே 1-ல் மதுக்கடைகள் மூடல் 

தஞ்சாவூர், ஏப்.29-மே-1ல் தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு, விற்பனை செய்யப்படமாட்டாது என ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

;