tamilnadu

சிபிஎம் உறுப்பினர் அட்டை வழங்கல்

திருவாரூர், மே 22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றிய-நகர கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் பேரவை கூடுரில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து சிறப்பித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.சாமியப்பன், எஸ்.ராமசாமி, மூத்த உறுப்பினர் கே.ரெங்கசாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பா.கோமதி மற்றும் ஒன்றிய-நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கும் பேரவை சந்தான ராமசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் சோம.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நா.பாலசுப்ரமணியன், பி.கந்தசாமி ஆகியோர் கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கினர். மாவட்டக் குழு உறுப்பினர் கே.கைலாசம், நகரச் செயலாளர் ஜி.டி.ஜோசப் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், நகர-கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

பாபநாசம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் நிகழ்ச்சி, கபிஸ்தலம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிபிஎம் பாபநாசம் ஒன்றியச் செயலாளர் பி.எம்.காதர் உசேன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கி சிறப்புரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கேட்டு பெற வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ், எரிவாயு குழாய் பதிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி ஜூன் 5 முதல் 10-ம் தேதி வரை இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. 


;