கரூர், ஆக.26- அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு கரூரில் 2 நாள் நடைபெற்றது. மகளிர் துணைக் குழு மாவட்ட மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் மகாவிஷ்ணன் தலைமை வகித்தார். துணை தலைவர் கவிதா வரவேற்று பேசினார். இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகி எம்.சைலஜா சிறப்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் எம்.செல்வராணி வேலையறிக்கையை முன்வைத்து பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட புதிய அமைப்பாளராக எம்.செல்வராணி தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு தோழர் பழ.நாகராஜன் அரங்கில் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் மு.மகாவிஷ்ணன் தலைமை வகித்தார். எல்ஐசி ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணை தலைவர் வி.கணேசன் வரவேற்று பேசினார். மாவட்ட துணை தலைவர் என்.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் எம்.சுப்பிரமணியன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் என்.ஜனார்தன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் கே.சக்திவேல் வேலையறிக்கையை முன்வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் பொன் ஜெயராம், வரவு- செலவு அறிக்கையை முன்வைத்து பேசினார். சிஐடியு சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஜீவானந்தம், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஐ.ஜான்பாட்ஷா, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜ.ஜெயராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். புதிய மாவட்ட செயலாளராக கே.சக்திவேல், மாவட்ட தலைவராக எம்.மகாவிஷ்ணன், பொருளாளராக பொன்ஜெயராம் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாநில நிர்வாகிகளின் இடைகால பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், சுகாதாரமான நவீன இலவச கழிப்பிடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானாவில் இருந்து பேரணி துவங்கி பொது மாநாடு நடைபெற்ற சங்க அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது.