கும்பகோணம், ஜூன் 27- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயி லில் சிலை செய்வது தொடர்பாக தேடப் பட்டு வந்த ராஜப்பா குருக்கள் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு கும்பகோணம் நீதிமன்றத் தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனிதநேயம் மற்றும் அவரது வயது மூப்பு காரணமாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து ராஜப்பா குருக்களுக்கு கும்பகோணம் நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சோமாஸ் கந்தர் சிலை செய்ததில் பல கோடி ரூபாய் மோசடி செய்த தாக ராஜப்பா குருக்கள் கனடாவிலிருந்து மும்பை வந்த போது கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.