tamilnadu

img

வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 25- திருச்சி தூய வளனார் கல்லூரியில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்- இந்தியா சார்பில் தேசிய மாநாடு மற்றும் வெண்புள்ளி உள்ளவர்களுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வெண்புள்ளி உள்ள தாய், தந்தை யருக்கு இக்குறைபாடு இல்லா நல்ல முறையில் பிறந்த குழந்தைகள் மாநாட்டை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இயக்க செயலாளர் உமாபதி செய்தியாளரிடம் கூறியதாவது: வெண்புள்ளி உள்ள வர்களை வெண்குஷ்டம் என்று சொல்லக் கூடாது என அரசாணை பெற்றிருக்கிறோம். எனவே வெண்புள்ளிகள் உள்ளோரை அவ்வாறு அழைக்கவோ அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கவும் கூடாது. இந்நோய் சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் நோய். தொற்று நோய் அல்ல, உயிர்க்கொல்லி நோய் அல்ல என்ற அறிவியல் உண்மைகளை மத்திய, மாநில  அரசுகள் அறிவிக்க வேண்டும். அதன் மூலம் லட்சக்கணக்கானோர் மன அழுத்தத்தி லிருந்து விடுபட முடியும்.  மேலும் எல்லா கல்வி முறைகளிலும் வெண்புள்ளி பற்றி பாடத்திட்டமாக கொண்டு வர வேண்டும். வெண்புள்ளி கள் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்து வதுடன் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வழிவகை செய்ய வேண்டும். வெண்புள்ளி உள்ளவர்களை இந்திய ராணு வத்தில் சேர்ப்பது இல்லை என்ற குறைபாடு நிலவுகிறது. எனவே இனிவரும் காலங்களி லாவது ராணுவ பணிகளில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றியதாக தெரிவித்தார்.  மாநாட்டில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று வெண்புள்ளி மற்றும் அவை ஏற்படுவதற்கான காரணம், சிகிச்சை முறை குறித்து  பேசினர். மாநாட்டில் சிறந்த சமூக சேவகர் விருது தொடர்ந்து 10 ஆண்டுகளாக அன்னதான சமாஜ தலைவராக சிறந்த சேவை புரிந்த முத்துகிருஷ்ணனுக்கும், சிறந்த கல்வி யாளர் விருது பெரியார் மணியம்மை  கல்லூரி முதல்வர் செந்தாமரைக்கும் வழங்கப்பட்டது. மேலும் வெண்புள்ளி களால் பாதிக்கப்பட்டோருக்கான சுயவரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். 

;