tamilnadu

img

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வாரியப் பயன்களில் பாரபட்சம் காட்டுவதா?

புதுக்கோட்டை, ஜூலை 1-  கட்டுமானம், ஆட்டோ, சுமைப்பணி உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு நலவாரிய உதவிகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து புதுக்கோட்டை நலவாரிய அலுவலகம் முன்பாக சிஐடியு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சி. மாரிக்கண்ணு, செ.பிச்சைமுத்து, எம். வீரையன், ஜி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத் தில் கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.குமார்  சிறப்புரையாற்றினார். கோரிக்கை களை விளக்கி சிஐடியு மாவட்டச் செய லாளர் க.முகமதலிஜின்னா, பொருளா ளர் சி.அடைக்கலசாமி, துணைத் தலை வர் ச.பாலசுப்பிரமணியன், அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் க.சிவக் குமார் உள்ளிட்டோர் பேசினர். இதில், 15 ஆண்டுகளாக இருந்த நடைமுறையை தொழிற்சங்கங்களை கலந்துகொள்ளாமலும், கண்கா ணிப்புக் குழுக் கூட்டம் நடத்தாமலும் மாற்றியதைக் கண்டித்து, நலவாரியப் பிரச்சனை தொடர்பாக பேசச் சென்ற தொழிற்சங்கத் தலைவர்களை அவ மரியாதையாகப் பேசிய புதுக் கோட்டை தொழிலாளர் துணை ஆய் வாளர் ராகவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டவை கோரி முழக் கங்கள் எழுப்பப்பட்டன.