tamilnadu

img

அகில இந்திய ஆர்எம்எஸ்-எம்எம்எஸ் ஊழியர் சங்கம் 3 நாள் தொடர் உண்ணாவிரதம்

திருச்சிராப்பள்ளி, ஜன.22- திருப்பதிரிபுலியூர் ஆர்எம்எஸ் சிதம்பரம் எஸ்டிஜி அலுவலக மூடல் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். அலுவலகம் மூட லுக்கு தவறான தகவல்கள் அளிப்பதை கைவிட வேண்டும். திண்டிவனம் ஆர்எம்எஸ் மீண்டும் இரவு பிரிவாக மாற்ற வேண்டும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கரூர், கும்ப கோணம், புதுக்கோட்டை, அலுவல கங்களை இரவு பிரிவாக இயங்க உத்தரவிட வேண்டும். ஏடிஎல் குளறுபடிகளை களைந் திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஆர்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் ஊழியர் சங்கம் ஆர்3, ஆர்4 சார்பில் கடந்த 3 நாட்க ளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. முதல் நாளான ஜன.20 அன்று நடை பெற்ற போராட்டத்தை ஆர்4 முன்னாள் மாநி லச் செயலாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி ஆர்3 மாநிலச் செயலர்கள் சங்கரன், பரந்தா மன் ஆகியோர் பேசினர். போராட்டத்தின் நிறைவு நாளான புதனன்று, போராட்டத்தை விளக்கி கோட்ட செயலாளர்கள் குணசேக ரன், கிஷோர்;குமார், கிளைச்செயலாளர்கள் பிரபாகர், ஜெயபாண்டியன் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் ஏராளமான ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.

;