tamilnadu

img

தனியார் கல்லூரியில் மோதலில் ஈடுபட்ட 28 மாணவர்கள்

திருச்சி அரசு மருத்துவமனையை சுத்தம் செய்ய உத்தரவு

மதுரை, பிப்.10- மோதலில் ஈடுபட்ட திருச்சிராப்பள்ளி தனியார் கல்லூரி மாணவர்கள் 28 பேர், திருச்சிராப்பள்ளி  கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவமனைக் கல்லூரி மருத்துவ மனையை சுத்தம் செய்யவேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சிராப்பள்ளியில்  ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி உள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் இந்தக் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்பட்ட மோதலில், ஒருவருக்கொருவர்  தாக்கிக்கொண்டனர்.  தகவல் அறிந்த  காவல்துறையில் அங்கு சென்று மோதலில் ஈடுபட்ட இரு தரப்பையும் சேர்ந்த 28 மாணவர்களையும்  கைது செய்தனர்.

இந்த நிலையில்  சமரசம் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை திங்களன்று விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, 28 மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தார். மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் 28 பேரும், பிப்ரவரி 22- ஆம் தேதி, திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனையின் பொது வார்டில் சுத்தம் செய்து அது தொடர்பாக மருத்துவமனை முதல்வரிடம் சான்றிதழ் பெற்று பிப்,26-ஆம் தேதி  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.