tamilnadu

மாற்றுத்திறனாளிகளின் பெற்றோருக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்க உத்தரவு... மாற்றுத்திறனாளிகள் சங்கம் பாராட்டு

திண்டுக்கல்:
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பெற்றோருக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.1000 வழங்க முன்வந்த திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அதிகாரிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் பாராட்டுதல்களை தெரிவித்துளளது. 
இதுதொடர்பாக அனைத்து வகைமாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப போர் நலச் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத்தலைவர் செல்வநாயகம், மாவட்டச் செயலாளர் பகத்சிங் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:-கடுமையாக ஊனமுற்று படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது அரசு ஒவ்வொரு மாதமும் ரூ.1,500வழங்கி வருகிறது. இவ்வகை மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பெற்றவர்கள் எந்த வேலைக்கும் செல்லாமல் குழந்தைகளை கவனிப்பது ஒன்றே வேலையாக கொண்டுள்ளதை கருத்தில் கொண்டும் இவர்களின்குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டும்தமிழக அரசு இவ்வகை மாற்றுத்திறனாளிகளின் பெற்றோருக்கும் தனியாக ரூ.1,000 பராமரிப்புச் செலவு வழங்க ஆறு மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

ஆனால் ஆறுமாதங்களாக யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. இதையடுத்து இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் களை அலுவலகத்திற்கு நேர்கானலுக்கு வரவழைத்து பயனாளிகளை தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு ரூ.2,500 கிடைக்கும். சங்க கோரிக்கையை ஏற்றுசெயல்படுத்த முன்வந்த மாற்றுத்திறனாளிகள் அலுவலக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

;