tamilnadu

மயானத்திற்கு தார்ச்சாலை அமைக்க எதிர்ப்பு

சின்னாளபட்டி, அக்.20- நிலக்கோட்டை தாலுகா கோட்டூர் ஊராட்சிக்குட்பட்டது செல்வாநகர். இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இந்த ஊருக்கான மயானம் ஊரின் ஒதுக்குப்புற மாக அமைந்துள்ளது மாயனத்திற்கு செல்வதற்கு மண் பாதையே இருந்தது. கிராமமக்களின் கோரிக்கை, தொடர் போராட்டத்தையடுத்து மண் சாலையை தார் சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கி யுள்ளது. இந்த நிலையில் இந்த ஊரைச் சேர்ந்த சிலர் தார்சாலை அமைக்கவிடமாட்டோம் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், காவல்துறை ஆகியோரிடம் புகாரளித்துள்ளனர்.மாவட்ட ஆட்சியர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிராமமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.