tamilnadu

img

செப்.13-ல் சுமைப்பணித் தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய போராட்டம்

திண்டுக்கல்:
மத்திய பாஜக அரசு கடைப்பிடிக்கும் மோசமான பொருளாதாரக் கொள்கையால் தொழில் நெருக்கடி ஏற்பட்டு சரக்கு போக்குவரத்து துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை உருவாக்கிய பாஜக அரசைக் கண்டித்து செப்டம்பர் 13 ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங்களில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்என்று சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மாநில சுமைப்பணித் தொழிலாளர் சம்மேளத்தின்(சிஐடியு)  மாநிலக்குழு கூட்டம் புதனன்று திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் உள்ள  சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.குணசேகரன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத் தலைவர்  திருவேட்டை, சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.வெங்கடபதி, பொருளாளர் அருள்குமார் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு, மத்திய பாஜக அரசின் கொள்கைகளையே கடைப்பிடிப்பதால்  தொழில் பாதிப்பு இன்னும் கூடுதலாக உள்ளது. மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் செப்டம்பர் 13 ஆம்  தேதியன்று  ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. (நநி)

;